மளிகைக் கடையைத் தொடங்குவது எப்படி?
மளிகைக் கடையை எவ்வாறு திறப்பது என்பது குறித்த முழுமையான வழிகாட்டி
மளிகைக் கடைகள் ஒவ்வொரு இந்திய நகரங்களின் உயிர்நாடியாகும், கல்லூரியில் இருந்து எந்த ஆடம்பரமான பட்டமும் தேவையில்லாத தொழில்களில் ஒன்றாகும். அறிவு, ஒழுக்கமான நிதி மேலாண்மை மற்றும் உங்கள் கடையைத் திறப்பதற்கான உந்துதல் இவை அனைத்தும் இருந்தால், இந்த மிகப்பெரிய சந்தையில் உங்கள் பயணத்தைத் தொடங்கலாம்.
ஒரு மளிகைக் கடைக்கு ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் கூட்டம் என்று இருப்பதில்லை, ஆனால் பெரிய சந்தையாக இருப்பதால், போட்டி பெரும்பாலும் அதிகமாகவே உள்ளது. பாரம்பரிய மார்க்கெட்டிங் முறைகளில் ஈடுபடுவது 2020 ஆம் ஆண்டில் போதுமானதாக இருக்காது. எனவே உங்கள் நிபுணத்துவத்தை மேம்படுத்த நாங்கள் இதைத் தயாரித்துள்ளோம்.
மளிகைக் கடை என்றால் என்ன?
உங்கள் அன்றாட தேவைகளுக்கு ஒரு பொதுவான கடை அல்லது சந்தை.
- பெரும்பாலும் மளிகைக் கடைகளில் தினசரி தேவைகள் மற்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் மளிகை பொருட்கள் இருக்கும்.
- எந்தவொரு கடையின் அளவும் உள்ளூர் வணிகருக்கு கிடைக்கும் நிதியைப் பொறுத்தது.
- சிறு மளிகைக் கடைகள் பெரும்பாலும் இந்தியாவில் மட்டுமே பெருமளவில் உள்ளன.
- மளிகைக் கடைகள் அவற்றின் சக்தியால், பல நூற்றாண்டுகளாக, மன்னர்கள் காலம் முதல் 2021 வரை சுமூகமாக கடந்து வந்துள்ளன.
- கொரோனா காலத்தில் கூட, உள்ளூர் மளிகைக் கடைகள் பல சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் இணையதளங்களின் விற்பனையை மிஞ்சியது.
- இந்தியாவின் நகரங்கள் மற்றும் கிராமங்களில் 1.5 கோடிக்கும் அதிகமான மளிகைக் கடைகள் உள்ளன.
- எந்தவொரு மளிகைக் கடையையும் லாபகரமானதாகவும், முதலீடு செய்யத் தகுதியானதாகவும் இருக்கும் விஷயங்கள்-
- உள்ளூர் மற்றும் பொது போக்குவரத்து வழியாக எளிதாக அணுகலாம்.
- வழக்கமான வாடிக்கையாளர்களுடன் சுமூகமான நீண்ட கால உறவைப் பேண உதவுகிறது.
- வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் பொருட்களை மட்டுமே ஸ்டாக் வைத்தால் போதும்.
- கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் கடன் கணக்கு தொடர்பான நன்மைகள்.
- குறிப்பிட்ட ஆர்டர்களுக்கு இலவச ஹோம் டெலிவரி வழங்குதல்.
- டிஜிட்டல் கட்டண முறைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் வசதியை வழங்குதல்.
- ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சிறப்புக் கவனம் செலுத்துவது சாதாரண மக்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது.
மளிகைக் கடையை எவ்வாறு திறப்பது?
மளிகைக் கடையை எவ்வாறு தொடங்குவது என்பது குறித்த இந்த எளிய மற்றும் பயனுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
1. திடமான வணிகத் திட்டத்தை (பிசினஸ் பிளான்) வைத்திருங்கள்
- எந்தவொரு சிறு அல்லது பெரிய வணிகமும் சரியான வணிகத் திட்டம் இல்லாவிட்டால் சீக்கிரமே பேரழிவாக மாறும்.
- நீங்கள் குறிவைக்கும் வாடிக்கையாளர்களின் நிதி நிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்கள் பொருட்களின் விலையை நிர்ணயிக்கவும். முதலில், வாடிக்கையாளர்களின் வாங்கும் சக்தியைப் பற்றி ஆய்வு செய்யுங்கள்.
- அவர்களின் தேவைகள், விருப்பங்கள், தேர்வுகள் மற்றும் வாங்கும் சக்தி ஆகியவற்றைக் கண்காணிப்பதன் மூலம் நீங்கள் ஒரு விற்பனை வழிமுறையை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
- புதிய மளிகைக் கடையாக இருப்பதால் உங்களிடம் பணிபுரியும் ஊழியர்களைப் பற்றி நினைவில் கொள்ளுங்கள். உங்களைப்போல அவர்களும் கடுமையாக உழைப்பவர்களாக இருக்கவேண்டும்.
2. உங்கள் கடைக்கான இடத்தைத் தேர்வுசெய்யுங்கள்
மளிகைக் கடையைத் தொடங்குவதில் இது மிக முக்கியமான பகுதியாகும். நீங்கள் தொடங்குவதற்கு முன்பே உங்கள் வணிகத்தின் வெற்றிக்கோ தோல்விக்கோ உங்கள் கடை இருக்கும் இடம் பெரிய காரணியாக இருக்கும்.
- ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட வகை வாடிக்கையாளர் தளம் இருக்கும், பகுதிக்கேற்ப அவர்களது தேவைகள் மாறுபடும்.
- உங்கள் பகுதியில் உள்ள மக்களின் வயதை பற்றி தெரிந்துகொள்வது அவர்கள் பயன்படுத்தும் வழக்கமான பொருட்கள் பற்றி நீங்கள் தெளிவாக இருக்க உதவும். அதைப்பொறுத்து நீங்கள் பொருட்களை ஸ்டாக்கில் வைக்கலாம்.
- நீங்கள் ஒரு ஆடம்பரமான வட்டாரத்தில் அல்லது இளைஞர்கள் அதிகம் உள்ள பகுதியில் ஒரு கடையைத் திறந்தால், நீங்கள் நகர்ப்புற பொருட்கள் மற்றும் சமீபத்திய ஸ்டாக்களை வைத்திருக்கவேண்டும்.
உதாரணமாக, ஒரு கிராமத்தில் உள்ள ஒரு சிறிய மளிகைக் கடையின் நுகர்வோர் பெரும்பாலும் உள்ளூர் வணிகர்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்ற மலிவான பொருட்களை கொண்டிருக்கும்.
3. உங்கள் வாடிக்கையாளர்களைப் புரிந்து கொள்ளுங்கள்
மளிகைக் கடையைத் திறப்பதற்கான இடத்தை நீங்கள் தேர்வு செய்த பிறகு உங்களது இலக்கு அன்றாட வாடிக்கையாளர்களைப் புரிந்துகொள்வதே ஆகும்.
- அவர்கள் அடிக்கடி வாங்க விரும்புவது என்ன?
- பொதுவாக, உங்கள் வாடிக்கையாளர் உங்கள் கடையில் இருந்து 1 முதல் 2 கிலோமீட்டர் தொலைவுக்குள் இருப்பார்கள்.
- நகரத்தின் புதிதாக வளர்ந்த பகுதிகளில் உங்கள் சந்தையை விரிவாக்குவது வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும். முழு பகுதிக்கும் உங்களை எளிதாகத் தெரியும், மேலும் புதிதாக கட்டப்பட்டிருப்பதால் மலிவு விலையில் அதிக இடத்தைப் பெறுவதற்கான வாய்ப்பும் அதிகம்.
4. உங்கள் முதலீடுகளை கணக்கிடுங்கள்
நீங்கள் இடம், பொருட்கள், சப்ளையர்கள் மற்றும் ஊழியர்களை முடிவுசெய்யும் பொது உங்கள் முதலீடுகளை கணக்கிட மறந்துவிடாதீர்கள்.
- நீங்கள் ஒரு சிறிய அளவிலான மளிகைக் கடையைத் திறக்கிறீர்கள் என்றால், குறைந்த பணியாளர்கள் மற்றும் குறைந்த ஸ்டாக் கொண்டிருப்பதன் மூலம் உங்கள் அளவை நீங்கள் குறைக்க வேண்டியிருக்கும்.
- இடம், வாடகை, சரக்குகள், தனிக் கடைகள் அல்லது அழகாக அடுக்கி வைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட சூப்பர் மார்க்கெட் போன்ற பிற வசதிகளுக்கு மாறுபட்ட அளவிலான முதலீடுகள் தேவைப்படும்.
சராசரியாக, அனைத்து செலவினங்களுடன் ஒரு நல்ல கடையை 50,000 முதல் 2 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கலாம்.
5. உங்கள் கடையை டிஜிட்டல் மயமாக்குங்கள்
- தொற்றுநோய் காலத்தில், பெரிய இழப்புகளைச் சந்திக்காமல் செயல்பட முடிந்த கடைகள் - அத்தியாவசியப் பொருட்களுக்கான மளிகைக் கடை மற்றும் அவசரகால மருந்துகளுக்கான மருந்தகங்களே ஆகும்.
- சமூக இடைவெளியை கடைபிடிக்க வெளியில் செல்வதைத் தவிர்க்கும் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கைத் தேர்வு செய்கிறார்கள் .
- உங்கள் கடையை டிஜிட்டல் மயமாக்குவது என்பது என்பது டோர் டெலிவரி மற்றும் பிசினஸ் வாட்ஸ்அப் மட்டுமல்ல, உங்கள் கடன்/ பேமெண்ட் வாடிக்கையாளர் கணக்குகளை OkShop பயன்படுத்தி நிர்வகிப்பதையும் குறிக்காது.
- ஒரு கிளிக்கில் எல்லா பொருட்களும் கிடைப்பதால், உங்கள் கடையும் எளிதாக வாடிக்கையாளர்களை சென்றடைய முடியும்.
6. அனைத்து உரிமங்களையும் அல்லது அனுமதிகளையும் பெறுங்கள்
இந்தியாவில் ஒரு மளிகைக் கடையைத் திறக்க சில சட்டங்களும் உரிமங்களும் உள்ளன. அவை-
- கடை மற்றும் ஸ்தாபன பதிவு (Shop & Establishment Registration)
- உணவு உரிமம் (Food license)
- நிறுவன பதிவு (Entity Registration)
- பல்வேறு வரிச் சலுகைகள் பெற மற்றும் ரிவர்ஸ் வரிவிதிப்பை தவிர்க்க, நீங்கள் உங்கள் வணிகத்திற்கு GST பதிவு செய்து வேண்டும்.
- உங்கள் வருடாந்திர வருவாய் 20 லட்சத்திற்கு மேல் இருந்தால், உங்கள் GSTIN அல்லது உங்களுக்கான 15 இலக்க அடையாள எண்ணைப் பெறுவது கட்டாயமாகும்.
7. வார இறுதி தந்திரம்
பெரும்பாலான கடை உரிமையாளர்கள் கடைக்கு நெருக்கமாக வாழ்ந்தாலும் கூட, வார நாட்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே கடையைத் திறக்கிறார்கள்.
- நீண்ட நேரம் திறந்திருப்பது, அருகிலுள்ள வாடிக்கையாளர்களிடையே நம்பிக்கையைத் தருகிறது, வழக்கமான நேரத்த்திற்குப் பிறகும் உங்கள் கடையில் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் பெறலாம்.
- வார இறுதி தந்திரம் என்பது வார இறுதி மற்றும் பண்டிகைகளுக்கு உங்கள் கடைகளை திறந்து வைத்திருப்பதாகும், இது நல்ல லாபத்தை ஈட்ட உதவும்.
- வழக்கமற்ற நேரத்தில் திறந்திருப்பது விசுவாசமான நுகர்வோரைப் பெற உதவுகிறது மற்றும் வாடிக்கையாளர்களின் வார்த்தை மூலம் பாராட்டுகளை அதிகரிக்கிறது .
- கடைசியாக, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வாரம் முழுவதும் வேலையில் ஈடுபடுவதால், வார இறுதி நாட்களில் ஷாப்பிங் செய்கிறார்கள்.
8. உங்கள் போட்டியாளர்களைக் கண்காணிப்பது
உங்கள் கடையைத் தொடங்குவதற்கு முன், அருகிலுள்ள கடைகளுக்குச் சென்று ஒரு தெளிவைப் பெற வேண்டும்.
- கடையின் கட்டமைப்பையும் அவை பெரும்பாலும் வைத்திருக்கும் பிராண்டுகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.
- உங்கள் வாய்ப்புகளை மதிப்பிட்டு, புதிய வழிமுறைகளை உருவாக்கப் பாருங்கள்.
- உங்கள் போட்டியாளர்களை ஆய்வு செய்து, மார்க்கெட்டிங்கிற்கு அவர்கள் பயன்படுத்தும் பயனுள்ள நுட்பங்களைப் புரிந்து கொள்ளுங்கள்.
9. கூடுதல் சேவைகள்
- இருந்து ஒரு கவர்ச்சியான கடை வடிவமைப்பது முதல் இலவச ஹோம் டெலிவரி வழங்குவது வரை வாடிக்கையாளர்களுக்கு தனிக்கவனம் அளிப்பது அவர்களுக்கு பிடிக்கும்.
- நீங்கள் வழங்கக்கூடிய கூடுதல் எந்த சேவை உங்கள் கடைக்கு அருகிலுள்ள மற்ற அனைத்து கடைகளில் இருந்து உங்களை தனியாகக் காட்டும் என கண்டுபிடிக்கவும்
- நல்ல தரமான பொருட்கள் மற்றும் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில பிராண்டுகளை வைத்திருப்பதும் உங்களுக்கு உதவும்.
10. கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்குதல்
நீங்கள் உங்கள் பகுதியில் புதியவராக இருக்கும்போது, உங்கள் வாடிக்கையாளர்களை மிகுந்த ஈடுபாட்டுடன் வைத்திருக்கவேண்டும். படிப்படியாக விற்பனையை அதிகரிக்கவும் பல்வேறு முறைகளை நீங்கள் கொண்டு வர வேண்டும்.
- அனைத்து சிறு மற்றும் பெரிய வணிகங்களும் கவனிக்கப்படுவதற்கு விளம்பரம் மிகவும் முக்கியமானது, மேலும் உங்கள் மளிகைக் கடைக்கு மக்கள் ஒப்புதல் அளிக்க, உங்கள் எல்லா வளங்களையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
- உங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்களை ஈடுபடுத்துவது மற்றும் வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் போன்றவை இந்திய சந்தையில் உங்களை மக்கள் அறியக்கூடிய சிறந்த நுட்பமாக இருக்கும் .
- உங்கள் கடையின் வகையைப் பொறுத்து உள்ளூர் செய்தித்தாள்களுக்கு ஃபிளையர்களை அச்சிடுங்கள், மொபைல் மார்க்கெட்டிங் செய்யுங்கள் அல்லது வணிக பக்கங்களில் ஒரு விளம்பரத்தை வெளியிடுங்கள்.
- அதிக மக்களை ஈர்க்க, உற்சாகமான சலுகைகள் மற்றும் தள்ளுபடி வவுச்சர்கள் போன்றவற்றை வெளியிடலாம். மேலும், நீங்கள் சமூக ஊடக விளம்பரத்தையும் தேர்வு செய்யலாம்.
மளிகை வியாபாரம் இந்தியாவில் லாபகரமானதா?
- ஒரு மளிகைக் கடை வணிகத்தை வளர்க்க, அரிசி, மாவு, பருப்பு வகைகள், ஷாம்புகள், சோப்புகள், எண்ணெய்கள் போன்ற அடிப்படை பொருட்களை மலிவான விலையைப் பெறுவதற்கு, நல்ல சப்ளையர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களிடமிருந்து நீங்கள் பொருட்களை வாங்கவேண்டும்.
- இது ஒரு போட்டிமிகுந்த துறையாகும், ஆனால் மேலே உள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றினால், நீங்கள் எதிர்பார்த்ததை விட விரைவில் உங்கள் கடைக்கு சரியான நிலையையும் அங்கீகாரத்தையும் அளிக்க முடியும்.
- உங்கள் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விசுவாசமாக இருப்பது எல்லா போட்டியாளர்களுக்கு மத்தியில் நீங்கள் வலுவாக நிற்பதற்கான இறுதி வழியாகும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கே. நான் ஒரு மளிகைக் கடை வணிகத்தை எவ்வாறு தொடங்குவது?
பதில்: ஒரு மளிகைக் கடை வணிகத்தைத் தொடங்க நீங்கள் கவனித்துக் கொள்ளவேண்டியவை -
- திடமான வணிகத் திட்டம் வைத்திருத்தல்
- உங்கள் இடத்தைத் தேர்ந்தெடுப்பது
- உங்கள் வாடிக்கையாளர்களைப் புரிந்துகொள்வது
- உங்கள் முதலீடுகளை கணக்கிடுவது
- உங்கள் கடையை டிஜிட்டல் மயமாக்குவது
- அனைத்து உரிமங்கள் அல்லது அனுமதிகளைப் பெறுதல்
- வீக்கெண்ட் வித்தை
- உங்கள் போட்டியாளர்களைக் கண்காணிப்பது
- கூடுதல் சேவைகள்
- கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்குதல்
கே. மளிகைக் கடை வணிகம் லாபகரமானதா?
பதில்: ஆம், மளிகைக் கடை வணிகம் நீண்ட காலத்திற்கு லாபகரமானது.
ஒரு சிறிய சந்தையில் தொடங்குவது, சந்தை நிலைமைகளை அனுபவிக்கவும், தோல்விக்கான வாய்ப்புகளை குறைக்கவும் உங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும்.
கே. நான் ஒரு சிறிய மளிகைக் கடையை எவ்வாறு தொடங்குவது?
பதில்: சிறிய அளவிலான மளிகைக் கடை வணிகத்தைத் தொடங்க, நீங்கள் செய்ய வேண்டியது-
- உங்கள் முக்கிய சக்திகள் அல்லது சிறப்பை கண்டுபிடிக்கவும்
- ஒரு முதலீட்டாளரைக் கண்டுபிடியுங்கள் அல்லது வங்கியில் கடன் பெறுங்கள்
- ஒரு சிறிய இடத்தை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு எடுங்கள்
- லாபத்தை அதிகரிப்பதற்கு முன்பு கூடுதல் பணியாளர்களை நியமிப்பதைத் தவிர்க்கவும்
- சிறந்த ஒப்பந்தங்களுக்கு நம்பகமான விநியோகஸ்தர்கள் அல்லது சப்ளையர்களைக் கண்டறியவும்
- வெவ்வேறு பிராண்டுகளை அவ்வப்போது விளம்பரப்படுத்துங்கள்
கே. மளிகைக் கடைகள் என்றால் என்ன?
பதில்: ஒரு மளிகைக் கடை என்பது அன்றாட தேவைகளுக்கான சிறிய அங்காடியாகும், இது உங்கள் வீட்டுப் பொருட்களில் பெரும்பாலானவற்றை கொண்டிருக்கும்.
பொதுவாக, சிறிய அளவிலான உள்ளூர் கடைகள் MRPயில் பொருட்களை விற்கின்றன அல்லது பெரிய அளவு பொருட்களை வழங்குவதைத் தவிர்ப்பதுடன், நூடுல்ஸ் பாக்கெட்டுகள், சலவைப் பொடி, சோப்புகள், மாவு போன்றவற்றின் விற்பனையில் சிறிய அளவில் கவனம் செலுத்துகின்றன.
கே. மளிகைக் கடை என அழைக்கப்படுவது என்ன?
பதில். இதன் பொருள் பொதுவாக குடும்பங்களால் நடத்தப்படும் தினசரி தேவைகள் சார்ந்த கடை.
கே. இந்தியாவில் மளிகைக் கடை லாபகரமானதா?
பதில்: ஆம். உணவுத் தொழில் மற்றும் நுகர்வு என்பது இந்தியாவில் இருக்கும் சிறந்த வணிகங்களில் ஒன்றாகும்.
சரியான அளவு முதலீடுகள் மற்றும் சந்தைப்படுத்தல் மூலம், மளிகைக் கடைகள் தொடங்கிய சில மாதங்களுக்குள் லாபத்தை ஈட்டத் தொடங்குகின்றன.
கே. ஆங்கிலத்தில் மளிகைக் கடையை என்னவென்று சொல்கிறோம்?
பதில்: ஆங்கிலத்தில் மளிகைக் கடை என்பது grocery அல்லது general provisions store என்று அழைக்கப்படுகிறது
இந்தியாவில், மளிகைக் கடை என்பதற்கு தினசரி பொருட்கள் அல்லது உங்கள் உள்ளூர் டிபார்ட்மென்டல் ஸ்டோர் என்று பொருள்.
கே. மளிகைக் கடைக்கு எந்த உரிமம் தேவை?
பதில்: உங்கள் வட்டாரத்தில் ஒரு மளிகைக் கடையைத் திறக்க தேவையான உரிமங்கள்-
- நிறுவன பதிவு
- உணவு உரிமம்
- கடை மற்றும் ஸ்தாபன பதிவு
- FSSAI உரிமம்
கே. இந்தியாவில் ஒரு மளிகைக் கடையின் லாப அளவு என்ன?
பதில்: கடையின் திறனைப் பொறுத்தவரை, இந்தியாவில் மளிகைக் கடைகளின் லாபம் 5% முதல் 25% சதவிகிதம் வரை இருக்கும்.
மளிகைக் கடை இந்தியாவில் ஒரு பயனுள்ள சந்தையாகும். எனவே, பல உள்ளூர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பிராண்டுகள் சாமானிய சந்தையில் தங்கள் பொருட்களை வழங்கவும் அதிகரிக்கவும் போட்டியிடுகின்றன.
கே. ஒரு மளிகைக் கடை எவ்வாறு இயங்குகிறது?
பதில்: பொதுவாக, மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் ஒரு வார கால கடன் அடிப்படையில் பொருட்களை வாங்குகிறார்கள் அல்லது விற்கிறார்கள். இது முக்கிய பெருநிறுவனங்களுக்கு பொருந்தாது.
மளிகைக் கடைகளுக்கான பொருட்கள் கடன் அடிப்படையில் வாங்கப்பட்டு, பின்னர் விற்கப்படுகின்றன, பின் விநியோகஸ்தருக்கு திருப்பிச் செலுத்துகின்றன, அதே நேரத்தில் லாப வரம்புகளைப் புரிந்துகொள்கின்றன.
கே. ஆன்லைன் மளிகைக் கடையை எவ்வாறு தொடங்குவது?
பதில்: ஆன்லைன் வணிகத்தைத் தொடங்க மற்றும் நிர்வகிக்க பல படிகள் உள்ளன, இணையவழி வலைத்தளங்களுடன் இணைவதற்குப் பதிலாக உங்கள் கடையை டிஜிட்டல் ஆக்குவது சிறந்தது. உங்கள் வணிகத்தை ஆன்லைனில் இலவசமாக அமைக்க விரும்பினால், நீங்கள் OkShop ஆப்-ஐ பயன்படுத்தலாம். இந்த ஆப்-ஐ நீங்கள் செய்யக்கூடியவை-
- பொருட்களின் பட்டியல்களை உருவாக்கவும்
- படங்களையும் விவரங்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பவும்
- கட்டணம் மற்றும் நினைவூட்டல்களை அனுப்பவும்
- தினசரி விற்பனையை கண்காணிக்கவும்
- சிறந்த User Interface-ஐ அனுபவிக்கவும்
- பல மொழி விருப்பங்களுடன் வசதிகளை சுலபமாக புரிந்து கொள்ளுங்கள்
கே. நீங்கள் ஒரு மளிகைக் கடையில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
பதில்: இந்தியாவில், உரிமங்கள், வாடகை, பொருட்கள் போன்றவை உட்பட, உங்கள் மளிகைக் கடையின் தொடக்க செலவு ஆரம்ப கட்டத்தில் சுமார் ரூ.50,000 வரை இருக்கும்.
கே. இந்தியாவில் எத்தனை மளிகைக் கடைகள் உள்ளன?
பதில்: பல்வேறு பதிவுகள் மற்றும் ஆய்வுகள் படி, இந்தியா முழுவதும் 12 மில்லியனுக்கும் அதிகமான மளிகைக் கடைளைக் கொண்டுள்ளது.
இது இந்தியாவில் மிகவும் இலாபகரமான வணிகங்களில் ஒன்றாகும்.